top of page
Search

அழ அனுமதித்தேன் அவனே எழுந்தான்#TamilParenting#presence #consciousparenting #emotionaliintelligence

ஒரு மதியம், என் மகன் பூங்காவிலிருந்து ஓடி வந்தான்... கண்ணீர் வழிஞ்ச முகம், அழுக்கு படிஞ்ச கன்னங்கள். பேட்மிண்டன் பேட் வாசலுல போட்டுட்டு, நேரா என் மேல விழுந்தான். உடம்பு முழுக்க நடுங்குது, அழுகை அடக்க முடியல.


நான் குனிஞ்சு உக்காந்து, "ஹே... என் கண்ணா"னு மெல்ல சொல்லி கை விரிச்சேன். அவன் என் மார்புல மோதி, முகத்தை தோள்ல புதைச்சுக்கிட்டான். நான் அவனை இறுக்கமா அணைச்சு, முதுகுல மெதுவா தடவினேன். தங்கம் என்னடா ஆச்சு. ஓகேவா?


அவன் "என் ஃப்ரெண்ட்..."னு திக்கித் திக்கி சொன்னான்.


நான் "இது சரியா போயிடும்"னு சொல்லல. "அவன் அப்படி சொல்லல"னு ஆறுதல் சொல்லல."இதுக்கெல்லாம் யாராவது அழுவாங்களா". அப்படின்னு சொல்லல. வெறும் அழ அனுமதிச்சேன். நீண்ட நேரம் அழுதான்... பிறகு மெதுவா அமைதியாச்சு.


சற்று நேரத்துல, "என்ன நடந்ததுன்னு அம்மாகிட்ட சொல்றியானு? மெல்ல கேட்டேன்.


தலையை ஆட்டுனான். "இன்னும் இல்லை."


"சரி... நீ ரெடியா இருக்கும்போது சொல்லு. அம்மா இங்கதான் இருக்கா"னு சொல்லி, சோபால உக்காந்து அவனை அணைச்சு வச்சிருந்தேன். ரெண்டு பேரும் அமைதியா... அந்த கனத்துல ஒண்ணா.


பிறகு சின்ன குரல்ல சொன்னான், "அவன்... இனி என் ஃப்ரெண்ட் இல்லைனு சொன்னான்."


என் இதயம் இறுக்குச்சு. ஆனாலும் அமைதியா, அன்பா சொன்னேன், "ஆமா கண்ணா... இது ரொம்ப வலிக்கும். அம்மாவுக்கு தெரியும் எவ்வளவு கஷ்டம்னு. என் ஃப்ரெண்ட் அப்படி சொன்னா எனக்கும் கஷ்டமா தான் இருக்கும். நான் உன்னோட இருக்கேன்... எப்பவும்."


அடுத்த சில நாள் அவன் சின்ன புயலா இருந்தான். ஒரு நிமிஷம் "பூங்கைக்கு போலாமா?"னு கேப்பான்... அடுத்த நிமிஷம் "ஒருபோதும் போகல"னு சொல்வான். தனியா விளையாடுவான்.... "விட்டுடு"னு சொல்லல. "போய் சேர்ந்து விளையாடுன்னு" சொல்லல. அவனுக்கு இடம் கொடுத்தேன்... அவன் உணர்வுகளை உணர அனுமதிச்சேன்.


எங்க வீடு, அவங்க வீடு—பக்கத்து வீடு. அவன் அம்மாவும் நானும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். ரெண்டு பேரும் ஒரே முடிவு: "அவங்களே ஹேண்டில் பண்ணட்டும்... நாம குறிக்கிட்டா அவங்க கத்துக்க மாட்டாங்க. நாம தலையிடக் கூடாது."


பிறகு அக்கம் பக்கத்து பிறந்தநாள் பார்ட்டி. கேக், பலூன், குழந்தைங்க ஓடிட்டு இருந்தாங்க. நான் பார்த்தேன்—என் மகனும் அவன் ஃப்ரெண்டும் ரெண்டு எதிர் எதிரான கிரகங்க மாதிரி சுத்திட்டு இருந்தாங்க. முதல்ல தூரத்துல... பிறகு கொஞ்சம் கொஞ்சமா நெருங்குனாங்க. சில வார்த்தை, சில பார்வை. மாலை முடியுறப்போ ரெண்டு பேரும் கொஞ்சம் பேசிட்டு இருந்தாங்க... சின்ன சின்ன பாலம் மீண்டும் கட்ட ஆரம்பிச்சிருந்துச்சு.


வீட்டுக்கு வரும் போது, தெரு விளக்கு எரிய ஆரம்பிச்சிருந்துச்சு. நான் லைட்டா கேட்டேன், "நீங்க ரெண்டு பேரும் கடைசில கொஞ்சம் பேசின மாதிரி தெரிஞ்சுது."


அவன் தோள தூக்கிட்டு, கல்ல உருட்டிட்டே, "ஆமா... கொஞ்சம்"னு சொன்னான்.


நான் "ஓகே"னு தலையசைச்சேன். வேற எதுவும் கேக்கல.


இரண்டு நாள்ல எல்லாம் நார்மலா ஆயிடுச்சு. சிரிச்சு விளையாடிட்டு இருந்தாங்க.

அத பார்த்தப்போ எனக்கு ஒரு அமைதியான சந்தோஷம் வந்துச்சு. நான் எதையும் சரி(ஃபிக்ஸ் )பண்ணல... ஆனா நான் அங்க அவனுக்காக (be present) இருந்தேன். அழுகைக்கு இடம் கொடுத்தேன். உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்தேன். அவனுக்கு உள்ள தைரியத்த நம்பினேன். அவன் தானா வெளியே வந்தான்.


பத்து வயசு ஃப்ரெண்ட்ஷிப் அப்படித்தான்... குழப்பமா, அழகா. சில சமயம் நாம கொடுக்குற மிகப் பெரிய பரிசு—எல்லா உணர்வுகளையும் உணர அனுமதிப்பது... எப்பவும் "நீ தனியா இல்லடா, அம்மா இருக்கேன்"னு சொல்ற நிலையான இருப்பு.


இரண்டு முக்கியமான விஷயங்கள் நினைவில் வைத்துக்கொள்ள:


1. குழந்தையின் உணர்வுகளை முழுமையாக ஏற்று, உடனே சரி செய்ய முயலாமல் இடம் கொடுப்பது

2. குழந்தைகள் தங்கள் சண்டையை தாங்களே தீர்க்க விடுவது, தலையிடாமல் பாதுகாப்பான அடித்தளம் கொடுப்பது


Sangeetha 💕

 
 
 

Recent Posts

See All

Comments


bottom of page